எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் ராமேஸ்வரம் மீனவர்கள் 28 பேர் கைது

0 1237

எல்லை தாண்டிச் சென்று மீன் பிடித்ததாக, இலங்கை கடற்படையினரால் ராமேஸ்வரம் மீனவர்கள் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ராமேஸ்வரத்தில் இருந்த சுமார் 400 படகுகளில் சென்ற மீனவர்கள் கச்சத்தீவுக்கும் நெடுந்தீவுக்கும் இடையே மீன் பிடித்து கொண்டிருந்த போது  28 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து இலங்கை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றதாக சக மீனவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து  ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் அச்சத்தோடு  கரை திரும்பினர். அவர்களிடம்  பாதுகாப்பு துறையினர் விசாரணை நடத்தினர்.

கடல் முழுவதும் இலங்கை கடற்படை கப்பல்கள் அணிவகுத்து நின்று அச்சுறுத்துவதாக கரை திரும்பிய மீனவர்கள் குற்றம்சாட்டினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments