தனியார் நிறுவன பேருந்து மோதி பாமக நிர்வாகி உயிரிழப்பு: பேருந்து தீ வைத்து எரிப்பு..!

0 16968
திருவள்ளூர் மாவட்ட பா.ம.க. இளைஞரணி தலைவர் மீது பேருந்து மோதி விபத்து: பேருந்து தீ வைத்து எரிப்பு..!

சென்னையில் தனியார் நிறுவன பேருந்து மோதி பாமக நிர்வாகி உயிரிழந்த நிலையில், அந்த வாகனம் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.

பட்டாபிராமை அடுத்த அமுதூர்மேட்டைச் சேர்ந்த பாமக நிர்வாகி கார்த்திக், மாலை அணைக்கட்டுச்சேரியில் இருந்து இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்றார்.

அமுதூர்மேடு புற்றுக்கோவில் அருகே வரும்போது தனியார் நிறுவனப் பேருந்து ஒன்று அவரது வாகனம் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த கார்த்திக், மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த உறவினர்களும் நண்பர்களும் பேருந்தின் கண்ணாடிகளை நொறுக்கியதோடு தீ வைத்து கொளுத்தினர்.

தப்பியோடிய பேருந்தின் ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments