சவூதி அரேபியாவில் அதிரடி சோதனைகள்-கோடிக்கணக்கான பதுக்கல் பணம் பறிமுதல்

0 78610
சவூதி அரேபியாவில் ஊழல் தடுப்பு அமைப்பு நடத்திய பல அதிரடி சோதனைகளில், மறைத்து வைக்கப்பட்டிருந்த கோடிக்கணக்கான பணம் பிடிபட்டது.

சவூதி அரேபியாவில் ஊழல் தடுப்பு அமைப்பு நடத்திய பல அதிரடி சோதனைகளில், மறைத்து வைக்கப்பட்டிருந்த கோடிக்கணக்கான பணம் பிடிபட்டது.

காலியான தண்ணீர் தொட்டிகளிலும், அறைகளின் மேற்கூரைகளிலும் ஒளித்து வைக்கப்பட்டிருந்த பணம் பிடிபட்டுள்ளது. மூத்த ராணுவ அதிகாரிகள் மற்றும் சாதாரண அரசு அதிகாரிகளுக்கு இந்த பணப்பதுக்கலில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது, ஊழல் செய்து பணத்தை பதுக்கியதற்காக கடந்த 2017 ல் அரசு குடும்பத்தினர் பலர் ரியாத்தில் உள்ள ரிட்ஸ் ஹோட்டலில் சிறை வைக்கப்பட்டதை நினைவுபடுத்துவது போல உள்ளதால் மினி ரிட்ஸ் என்று அழைக்கப்படுகிறது.

பணம் பதுக்கியவர்கள் கைது செய்யப்பட்டதுடன், பறிமுதலான பணம் அரசு கருவூலத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. 2017ல் அதிகாரமிக்க பட்டத்து இளவரசர் முகம்மது பின் சுல்தான் எடுத்த அதிரடி நடவடிக்கையால் அரச குடும்பத்தினர் பலரிடம் இருந்து சுமார் 4 லட்சத்து 88 ஆயிரம் கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments