தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் 10 பேருக்கும் கீழ் பதிவான கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் 10 பேருக்கும் கீழ் பதிவான கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில், புதிதாக ஆயிரத்து 141 பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கொரோனா பாதிப்பிலிருந்து, ஒரே நாளில் ஆயிரத்து 203 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரே நாளில் உயிரிழப்பு 14 ஆக பதிவாக, 29 மாவட்டங்களில், புதிய கொரோனா உயிரிழப்பு இல்லை.
சென்னையில் 343 பேருக்கு, புதிதாக பெருந்தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.
பெரம்பலூர் 2- வது நாளாக தொடர்ந்து பெருந்தொற்று இல்லாத நிலையில் தொடர, 8 மாவட்டங்களில், ஒற்றை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனாவுக்கு 10 ஆயிரத்து 115 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Comments