விபத்தில் சிக்கிய இமாச்சல் மாநில ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா எந்த காயமும் இன்றி உயிர் தப்பினார்

0 1429

ஐதராபாத்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட வாகன விபத்தில் சிக்கிய இமாச்சல் மாநில ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா எந்த காயமும் இன்றி உயிர் தப்பினார்.

சோட்டுப்புல் என்ற இடத்தில் ஆளுநர் பயணித்த கார் திடீரென சாலையை விட்டு இறங்கி விபத்துக்குள்ளானது. ஸ்டியரிங் திடீரென இடதுபுறமாக திரும்பியதால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை கார் இழந்ததாக கூறப்படுகிறது.

விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. நல்கொண்டாவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக ஐதராபாத்தில் இருந்து சென்று கொண்டிருந்த ஆளுநர், மாற்று வாகனத்தில் தமது பயணத்தை தொடர்ந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments