கங்கணா ரணாவத் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சிவசேனா சட்டமன்ற உறுப்பினர் உரிமைக் குழுவுக்கு நோட்டீஸ்

0 822

நடிகை கங்கணா ரணாவத் மீது சட்டப்பேரவை உரிமைக் குழு நடவடிக்கை எடுக்கக் கோரி சிவசேனா சட்டமன்ற உறுப்பினர் பிரதாப் சார்நாயக் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

பண மோசடி தொடர்பாக பிரதாப் சார்நாயக்கிடம் அமலாக்கத் துறையினர் கடந்த வாரம் 6 மணி நேரத்துக்கு மேல் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் சார்நாயக் வீட்டில் பாகிஸ்தான் கடன் அட்டை கைப்பற்றப்பட்டதாக நடிகை கங்கணா டுவிட்டரில் தெரிவித்திருந்தார். இது தொடர்பாகக் கங்கணா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாநில முதன்மைச் செயலாளரிடம் பிரதாப் சார்நாயக் ஒரு நோட்டீஸ் அளித்துள்ளார்.

அந்த நோட்டீசை சட்டப்பேரவை உரிமைக் குழுவுக்கு அனுப்பிக் கங்கணா மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தும்படி கேட்டுக்கொண்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments