நாட்டின் வட மாநிலங்களில் பனிமூட்டம் காரணமாக ரயில்கள் தாமதம் : பயணிகள் அவதி

0 875
நாட்டின் வட மாநிலங்களில் பனிமூட்டம் காரணமாக ரயில்கள் தாமதம் : பயணிகள் அவதி

நாட்டின் வட மாநிலங்களில் கடுங்குளிர் நிலவுவதால் பனிமூட்டம் காரணமாக வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன. ரயில்கள் பல மணி நேரம் தாமதமாக இயங்கி வருகின்றன.

உத்தரப்பிரதேசம், உத்தரக்கண்ட், இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், அரியானா, டெல்லி, ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் குளிர்காலம் தொடங்கி விட்டதால் இரவுநேரத்திலும் காலையிலும் கடுங்குளிர் நிலவுகிறது.

டெல்லியில் இன்று காலையில் கடும் பனிமூட்டம் காணப்பட்டதால் வாகனங்கள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடி மெதுவாக ஊர்ந்து சென்றன.

பனிமூட்டம் காரணமாக நெடுந்தொலைவு செல்லும் ரயில்கள் தாமதமானதால் உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் பயணிகள் பலமணி நேரமாகக் காத்திருந்தனர்.

இதேபோல் ஜம்மு காஷ்மீரிலும், பஞ்சாபிலும் கடுங்குளிரால் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments