ரஜினி வேடமிட்டு, இனிப்புகளுடன் காத்திருந்த ரசிகர்கள்.. ரஜினி வீட்டில் இல்லை என்று தெரிந்ததும் ஏமாற்றம்

0 41282
நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி, அவரது போயஸ் கார்டன் இல்லம் முன் குவிந்த ரசிகர்கள், ரஜினி வீட்டில் இல்லை என்று தெரிந்ததும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி, அவரது போயஸ் கார்டன் இல்லம் முன் குவிந்த ரசிகர்கள், ரஜினி வீட்டில் இல்லை என்று தெரிந்ததும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

பிறந்தநாளுக்கு நேரில் வாழ்த்து தெரிவிக்க காலை முதலே ரஜினி வீட்டின் முன் ஏராளமான ரசிகர்கள் இனிப்புகளுடன் குவிந்திருந்தனர். ரஜினியை வெளியே வர வலியுறுத்தி கோஷங்களும் எழுப்பினர். பெண் ரசிகைகள் சிலர் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தனர்.

கொரோனா சூழலில் ரசிகர்களை நேரடியாக சந்தித்து இனிப்பு வழங்க விரும்பாததால், ரஜினி நேற்றிரவே வீட்டில் இருந்து புறப்பட்டு சென்று விட்டதாக அவரது செய்தி தொடர்பாளர் வந்து கூறியதை அடுத்து, அவர்கள் பெரும் ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர்.

போயஸ் கார்டன், பின்னி சாலையில் தடுப்புகள் அமைத்து ரசிகர்கள் மேலும் வராமல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments