தீவிரவாதம் மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்து பிரதமர் மோடியுடன் பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரன் பேச்சு

0 786

தீவிரவாதம் மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்து பிரதமர் மோடியுடன் பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

இருநாட்டுத் தலைவர்களும் கொரோனாவுக்கு பிந்ததைய பொருளாதார ஒத்துழைப்பு, கடல்சார் பாதுகாப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், கொரோனா தடுப்பு மருந்தை மலிவு விலையில் வழங்குதல் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பேசியதாகத் தெரிகிறது.

அப்போது பிரான்சில் நடந்த தாக்குதல் குறித்து மோடி தனது இரங்கலைத் தெரிவித்தார்.

மேலும் தீவிரவாதம் மற்றும் தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பிரான்சுக்கு இந்தியாவின் முழு ஆதரவையும் இந்தியா வழங்கும் என மோடி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments