சகிர் கிராண்ட் ப்ரிக்ஸ் கார் பந்தயத்தில் மெக்சிகோவைச் சேர்ந்த செர்ஜியோ பெரேஸ் வெற்றி

0 1008
சகிர் கிராண்ட் ப்ரிக்ஸ் கார் பந்தயத்தில் மெக்சிகோவைச் சேர்ந்த செர்ஜியோ பெரேஸ் வெற்றி

பஹ்ரைனில் நடைபெற்ற பார்முலா ஒன் கார் பந்தயத்தில் மெக்சிகோவைச் சேர்ந்த செர்ஜியோ பெரேஸ் (Sergio Perez) வெற்றி பெற்றார்.

பார்முலா ஒன் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் சகிர் கிராண்ட் ப்ரிக்ஸ் (Sakhir Grand Prix) பஹ்ரைனில் நேற்று நடைபெற்றது.

இதில், பிரான்ஸின் எஸ்டேபானை (Esteban) பின்னுக்கு தள்ளி செர்ஜியோ பெரேஸ் வெற்றி பெற்றார். இதன் மூலம் இந்த தொடரில் அவர் தனது முதல் வெற்றியை பதிவு செய்தார்.

7வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்த லீவிஸ் ஹாமில்டன் கொரோனா தொற்றின் காரணமாக இந்த பந்தயத்தில் பங்கேற்கவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments