வரும் 8 ஆம் தேதி, விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள பாரத் பந்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவு

0 3235
டெல்லியில் நடக்கும் போராட்டத்திற்கு ஆதரவு கோரி வரும் 8 ஆம் தேதி,விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள பாரத் பந்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

டெல்லியில் நடக்கும் போராட்டத்திற்கு ஆதரவு கோரி வரும் 8 ஆம் தேதி,விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள பாரத் பந்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

ஆம் ஆத்மி கட்சியினரும், டெல்லி பொதுமக்களும் பாரத் பந்திற்கு ஆதரவு தர வேண்டும் என டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கேட்டுக் கொண்டுள்ளார்.

பாரத் பந்திற்கு திமுக, அதன் கூட்டணி கட்சிகள், காங்கிரஸ், தெலங்கானாவின் ஆளுங்கட்சியான தெலங்கானா ராஷ்டிரீய சமிதி, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளன.

இந்திய சுற்றுலா டிரான்ஸ்போர்ட்டர்ஸ் சங்கம், டெல்லி சரக்கு போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட 51 சங்கங்கள் விவசாயிகளின் போராட்டத்திற்கும்,பாரத் பந்திற்கும் ஆதரவு தெரிவித்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments