அமெரிக்காவில் 120ஆண்டு பழைமையான சர்ச்சில் பயங்கர தீ விபத்து

0 1554
அமெரிக்காவில் 120ஆண்டு பழைமையான சர்ச்சில் பயங்கர தீ விபத்து

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள 120 ஆண்டு பழைமை வாய்ந்த கிறித்தவ தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

கிழக்கு கிராமத்தில் உள்ள இந்த தேவாயத்தில் அதிகாலை 5 மணி அளவில் தீப்பிடித்து கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது. இந்த விபத்தில் அங்கிருந்த கட்டிடம் முழுவதும் எரிந்து நாசமானது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தீயணைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments