சென்னையில் அதிகாலையில் கனமழை..!

0 10773
சென்னையில் அதிகாலையில் கனமழை..!

சென்னையில் அதிகாலையில் கனமழை பெய்த நிலையில், இன்று 13 மாவட்டங்களில், கன முதல் மிக கனமழை வரையில், மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது 

வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில் மன்னார் வளைகுடா கடற்பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி வலுவிழந்து, காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும் என தெரிவித்துள்ளது.அதன் காரணமாக, இன்று கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் கன முதல் மிக மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகரில், அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடல் காற்றின் வேகம் குறைந்தாலும், மணிக்கு 30 கிலோ மீட்டர் முதல் 40 கிலோ மீட்டர் வரையில் வீசக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.

சென்னையில் இரவு முழுவதும் விட்டு விட்டு மழை பெய்த நிலையில் அதிகாலையில் கனமழை கொட்டியது. ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, அசோக்நகர், வடபழனி, புரசைவாக்கம், கே.கே.நகர், வளசரவாக்கம், கிண்டி, சைதாப்பேட்டை, அசோக்நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது. சாலைகளில் தேங்கி உள்ள நீரை மோட்டார் பொருத்தி அகற்றும் பணிகளும் ஆங்காங்கே நடைபெற்றன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments