கலிபோர்னியாவில், வேகமாகப் பரவி வரும் காட்டுத்தீ... 25,000 பேர் வீடுகளை விட்டு வெளியேற்றம்

0 1224

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயால் 25,000 க்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர்.

கடந்த புதன்கிழமை, குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து, அருகில் உள்ள காடுகளுக்குப் பரவியதால், ஏராளமான கட்டிடங்களும், 6000 ஏக்கர் காடுகளும் கருகி நாசமாகின.

காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் 500 தீயணைப்பு வீரர்களும், 11 ஹெலிகாப்டர்களும் இரவு பகலாக ஈடுபட்டுள்ள போதும், பலத்த சூறைக்காற்றால் தீ கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments