திருப்பதியில் 5 ஏக்கரில் பிரமாண்ட நந்தவனம் : மரங்களை நட்டு பராமரிக்க தேவஸ்தானம் முடிவு

0 8871

திருப்பதியில் 5 ஏக்கர் பரப்பளவில் உருவாகும் பிரமாண்ட நந்தவனத்தில் பலவகையான மரங்களை நட்டு பராமரிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

திருப்பதியில் செய்தியாளர்களிடம் பேசிய தேவஸ்தான செயல் அதிகாரி ஜவஹர் ரெட்டி, இந்த தகவலை தெரிவித்தார். இதுதவிர, கருடாத்ரி நகர் சோதனை சாவடி அருகில் உள்ள கீதாவனத்திலும் மரங்கள் நட்டு பராமரிக்கப்படும் என்று கூறிய அவர், இதற்காக தனியார் அமைப்புடன் தேவஸ்தானம் இணைந்து பணியாற்றும் என்றார்.

இதுதவிர, திருமலையில் மின்சார தேவைக்காக தர்மகிரி வேத பாடசாலை பகுதியில் 20 ஏக்கர் பரப்பளவில் சூரிய ஒளி மின்சக்தி திட்டம் துவக்க, தேவஸ்தானம் பரிசீலித்து வருவதாகவும் ஜவஹர் ரெட்டி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments