பிரேசிலில் 45 அடி உயர பாலத்தில் இருந்து சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் 17 பேர் பலி

தென் அமெரிக்க நாடான பிரேசிலில், 45 அடி உயர பாலத்தில் இருந்து சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் 17 பேர் பலியானார்கள்.
அந்நாட்டின் மினாஸ் ஜெராய்ஸ் மாநிலத்தில் ஜோவா மோன்லேவாட் என்னுமிடத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது. விபத்தில் சிக்கி, படுகாயம் அடைந்த 23 பேர் மீட்கப்பட்டு, உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
பேருந்தின் எந்திரத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டதால், விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. பிரேசிலில் ஒரே வாரத்தில் நிகழ்ந்த 2- வது மிகப்பெரிய விபத்து இதுவாகும்.
Comments