புயல் மழை வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்யத் தமிழகம் வந்துள்ள மத்தியக் குழு... பாதிக்கப்பட்ட பகுதிகளில் நாளை ஆய்வு

0 886

தமிழகம் வந்துள்ள மத்தியக் குழுவினர் புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை நாளை முதல் இரு நாட்கள் ஆய்வு செய்ய உள்ளனர்.

உள்துறை இணைச் செயலாளர் அசுதோஷ் அக்னிஹோத்ரி தலைமையில் தமிழகம் வந்துள்ள 7 பேர் கொண்ட குழுவினர் தலைமைச் செயலாளர் சண்முகத்தைச் சந்தித்துப் பேசினர்.

மத்தியக் குழுவினர் இரண்டு குழுக்களாகப் பிரிந்து நாளையும் நாளை மறுநாளும் வெள்ளப் பாதிப்புப் பகுதிகளைப் பார்வையிடுகின்றனர். ஒரு குழுவினர் வேளச்சேரி, பள்ளிக்கரணை, செம்மஞ்சேரி ஆகிய பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நாளை பார்வையிட உள்ளனர்.

நாளை பகல் பதினொன்றரை மணிக்கு நூக்காம்பாளையத்தில் செங்கல்பட்டு மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments