விவசாயிகள் போராட்டம் குறித்து கனடா பிரதமரின் தேவையற்ற பேச்சு... கனடாவில் நடக்கும் மாநாட்டை புறக்கணிக்கும் இந்தியா

விவசாயிகளின் போராட்டம் குறித்து தேவையற்ற கருத்துக்களை கனடா பிரதமர் ஜஸ்டின் டுரூடு கூறியதன் எதிரொலியாக, கனடாவில் நடக்க உள்ள கொரோனா குறித்த வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை என இந்தியா தெரிவித்துள்ளது,
அடுத்த வாரம் நடக்கும் இந்த மாநாட்டில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்க மாட்டார் என கனடாவிடம் தெரிவிக்கப்பட்டு விட்டதாக டெல்லியில் வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னதாக ஜஸ்டின் டுரூடுவின் பேச்சுக்கு கனடா தூதுவரை அழைத்து கண்டனம் தெரிவித்த இந்தியா, அது தொடர்ந்தால் இரு நாட்டு உறவுகளில் அது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.
Comments