தெலுங்கானா மாநிலம் சிந்திபேட்டையில் அடுத்தடுத்து நடைபெற்ற விபத்தில் 5 பேர் உயிரிழப்பு… போலீசார் உள்பட 12 பேர் படுகாயம்

0 980

தெலுங்கானா மாநிலம் சிந்திபேட்டையில், விபத்தில் சிக்கியவர்களை மீட்டுக்கொண்டிருந்தவர்கள் மீது, லாரி மோதும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. 

இன்று காலை சிந்திபேட்டை புறநகர் சாலையில் கார் ஒன்று தடுப்புச் சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரில் வந்த 3 பேரும் உயிரிழந்த நிலையில், அவர்களை மீட்கும் பணியில் போலீசாரும், பொதுமக்களும் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, கரீம் நகரிலிருந்து அவ்வழியாக வந்த லாரி சாலையில் கூட்டமாக நின்றிருந்தவர்கள் மீது திடீரென மோதியது.

அங்கு கூட்டத்தில் நின்றிருந்த நபர் ஒருவர் நூலிழையில் உயிர் தப்பிய நிலையில், 2 பேர் உயிரிழந்தனர். ஆய்வாளர், காவலர் உட்பட 12 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

லாரி ஓட்டுநரை கைது செய்து விபத்து ஏற்படுத்தியதற்காக காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments