கனமழையால் திருப்பூர் அமணலிங்கேஸ்வரர் கோயில் முழுவதும் சூழ்ந்துள்ள வெள்ளம்

கனமழையால் திருப்பூர் அமணலிங்கேஸ்வரர் கோயில் முழுவதும் வெள்ளம்
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, உடுமலை வனச்சரகத்தில் அமைந்துள்ள பஞ்சலிங்க அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோயில் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. கோயிலைச் சுற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், கோவில் நடை சாத்தப்பட்டு இந்து அறநிலையத்துறை, வனத்துறை மற்றும் காவல்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
Comments