பிரேசிலில் பாலத்திலிருந்து கீழே விழுந்து பேருந்து விபத்து - 14 பேர் உயிரிழப்பு

பிரேசிலில் பாலத்திலிருந்து கீழே விழுந்து பேருந்து விபத்து - 14 பேர் உயிரிழப்பு
பிரேசிலில் பாலத்திலிருந்து கீழே விழுந்து பேருந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்தனர்.
Minas Gerais மாநிலத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
சுற்றுலாப் பயணிகள் 40 பேருடன் ஜோவா மோன்லேவாட் (Joao Monlevade) என்னுமிடத்தில் 15 மீட்டர் உயரப் பாலத்தில் சென்று கொண்டிருந்த பேருந்து இயந்திரக் கோளாறு காரணமாக கீழே விழுந்ததாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் படுகாயமடைந்த 26 பேர் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்துக்கான காரணம் குறித்த விசாரணை தொடர்கிறது.
Comments