தான் இறந்து விட்டதாகக் கூறி ரூ.23 கோடியை ஏமாற்றிய பெண்

தான் இறந்து விட்டதாகக் கூறி ரூ.23 கோடியை ஏமாற்றிய பெண்
பாகிஸ்தானை சேர்ந்த பெண் தான் இறந்துவிட்டதாக பொய்யான சான்றிதழை சமர்பித்து, அந்நாட்டு மதிப்பில் 23 கோடி ரூபாயை மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீமா கர்பாய் எனும் அந்தப் பெண், கடந்த 2008 மற்றும் 2009ல் அமெரிக்காவிற்கு சென்று காப்பீடு திட்டங்களை எடுத்துள்ளார். தொடர்ந்து, 2011ம் ஆண்டு சீமா இறந்துவிட்டதாகக் கூறி, அவரது பிள்ளைகள் சான்றிதழை சமர்பித்து காப்பீட்டு பணத்தை பெற்றுள்ளனர்.
இந்நிலையில், அந்தப் பெண் உயிருடன் உள்ளதாகவும், இதுவரை 5க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு உள்ளதாகவும், அமெரிக்க நிறுவனங்கள் அளித்த தகவலின் பேரில் பாகிஸ்தான் விசாரனை மேற்கொண்டுள்ளது.
Comments