சுரப்பா மீதான விசாரணைக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து

0 2838
சுரப்பா மீதான விசாரணைக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா மீதான விசாரணைக்கு தடை கோரிய வழக்கில், அண்ணா பல்கலைகழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகள் மற்றும் மாணவர்களின் நலன்கருதி வேந்தர் மற்றும் தமிழக அரசு உரிய முடிவு எடுப்பார்கள் என நம்புவதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பு வழக்கு விசாரணைக்கு வந்த போது இது சேவை தொடர்பான வழக்கு என்பதால் பொதுநல வழக்காக தாக்கல் செய்ய முடியாது என்று எனவே இது விசாரணைக்கு உகந்ததல்ல என அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா தரப்பில் தன்னையும் இந்த வழக்கில் சேர்க்கக் கோரி மனு செய்திருந்தார். வழக்கு விசாரணை வரும் 9-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments