சீனா அனுப்பிய சாங்-இ5 விண்கலம் நிலவிலிருந்து பாறை, மணல் மாதிரிகளை எடுத்து கொண்டு பூமிக்கு புறப்பட்டது

சீனா அனுப்பிய சாங்-இ5 விண்கலம் நிலவிலிருந்து பாறை, மணல் மாதிரிகளை எடுத்து கொண்டு பூமிக்கு புறப்பட்டது
நிலவு குறித்த ஆராய்ச்சிக்காக சீனா அனுப்பிய சாங்-இ5 விண்கலம், அங்கிருந்து பாறை, மணல் மாதிரிகளை எடுத்து கொண்டு பூமிக்கு புறப்பட்டது.
ஒரு வாரத்துக்கு முன்பு அந்த விண்கலத்தை சீனா அனுப்பியது. இதையடுத்து விண்கலத்திலிருந்து கீழே இறக்கப்பட்டு லேண்டர் மற்றும் அசென்டர் கீழிறக்கப்பட்டன. அதிலுள்ள கருவிகள் மூலம் மாதிரிகள் எடுக்கப்பட்டதையடுத்து இந்திய நேரப்படி இரவு சுமார் 8.40மணியளவில் பூமிக்கு விண்கலம் புறப்பட்டது.
அங்கிருந்து புறப்படும் முன்பு சீன தேசிய கொடி நாட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த விண்கலம் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினால், அமெரிக்கா, சோவியத் யூனியனுக்கு அடுத்து கடந்த 40 ஆண்டுகளில் நிலவிலிருந்து மாதிரிகளை எடுத்து வந்த 3ஆவது நாடு எனும் சாதனையை சீனா படைக்கும்.
Comments