டிச. 5 - ஜெயலலிதாவின் மறைந்த நாளன்று அகல் விளக்கு ஏற்ற தொண்டர்களுக்கு அழைப்பு - அதிமுக தலைமை அறிவிப்பு

0 11529

மிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சியை நிறுவிட சூளுரைத்து, ஜெயலலிதா மறைந்த நாளன்று, அகல் விளக்கு ஏற்றுமாறு, தொண்டர்களுக்கு
அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் அழைப்பு விடுத்துள்ளனர்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 4 -ஆம் ஆண்டு நினைவு தினம், , வருகிற 5ஆம் தேதி கடைபிடிக்கப்படுவதையொட்டி, இரு தலைவர்களும் அதிமுக தொண்டர்களுக்கு கூட்டாக கடிதம் எழுதி உள்ளனர்.

தமிழகம் முழுவதும் 5 ஆம் தேதி மாலை 6 மணிக்கு ஜெயலலிதாவின் உருவப்படம் முன், அகல் விளக்கு ஏற்றி, அஞ்சலி செலுத்துமாறு, அதிமுக தொண்டர்களை இரு தலைவர்களும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments