கொரோனா, சீனா என இரண்டு சவால்களையும் எதிர்கொள்ள தயார்-இந்திய கடற்படை தளபதி கரம்பீர் சிங்

கொரோனா மற்றும் சீனா என இரண்டு சவால்களையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக கடற்படை தளபதி கரம்பீர் சிங் தெரிவித்துள்ளார்.
கொரோனா மற்றும் சீனா என இரண்டு சவால்களையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக கடற்படை தளபதி கரம்பீர் சிங் தெரிவித்துள்ளார்.
கடற்படை தினத்தை முன்னிட்டு செய்தியாளர்களிடம் பேசிய அவர், எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீனாவின் சவால்களை, ராணுவம் மற்றும் விமானப்படையுடன் ஒருங்கிணைந்து எதிர்கொண்டுள்ளதாக கூறினார்.
ராணுவம் மற்றும் விமானப்படையின் தேவைக்காக, பல இடங்களில் கடற்படையின் பி 81 கண்காணிப்பு விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மேலும் வடக்கு எல்லைகளில் கூடுதலாக ஹெரான் கண்காணிப்பு டிரோன்களை களமிறக்கி இருப்பதாகவும் கரம்பீர்சிங் தெரிவித்தார்.
Comments