தமிழகத்தில் இன்று 1,416 பேருக்கு கொரோனா.. 14 பேர் பலி..!

தமிழகத்தில் இன்று 1,416 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது
தமிழ்நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில் 29 மாவட்டங்களில், புதிதாக கொரோனா உயிரிழப்பு நிகழவில்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
புதிதாக ஆயிரத்து 416 பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பிலிருந்து, ஒரே நாளில் ஆயிரத்து,413 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு,14 பேர் உயிரிழந்தனர்.
சென்னையில் 382 பேருக்கு, புதிதாக, பெருந்தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. 6 மாவட்டங்களில், ஒருநாள் பாதிப்பு, ஒற்றை இலக்கத்தில், பதிவாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Comments