பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தலைமையகத்தில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை

சென்னையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்திலும், நிர்வாகிகள் 5 பேரின் வீடுகளிலும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.
சென்னையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்திலும், நிர்வாகிகள் 5 பேரின் வீடுகளிலும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.
ஒன்பது மாநிலங்களில் 26 இடங்களில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகளின் வீடுகளிலும், அலுவலகங்களில் அமலாக்கத் துறையினர் இன்று ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். சென்னை திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், மதுரை, தென்காசி ஆகிய இடங்களில் பாப்புலர் பிரண்ட் நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை நடைபெற்றது. சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பாப்புலர் பிரன்ட் மாநில அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றது.
பாப்புலர் பிரண்ட் அமைப்புக்கு எங்கிருந்து நிதி வருகிறது என்பதை அறிய, அந்த அமைப்பின் வரவு செலவுக் கணக்குகள், நிர்வாகிகளின் வரவு செலவுக் கணக்குகளை அமலாக்கத் துறையினர் ஆய்வு செய்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Comments