மராட்டியத்தில் குடியிருப்புகளுக்கு சாதிப் பெயர்கள் நீக்கம் என்ற அறிவிப்பிற்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு

0 1138
மராட்டியத்தில் குடியிருப்புகளுக்கு சாதிப் பெயர்கள் நீக்கம் என்ற அறிவிப்பிற்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு

மராட்டியத்தில் குடியிருப்புகளுக்கு முன்பு இடப்பட்ட சாதிப் பெயர்களை நீக்கும் அம்மாநில அரசின் முடிவு முற்போக்கானது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

மராட்டிய மாநிலம் முழுமையும், சாதி ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையிலான பெயர்களைத் தாங்கியுள்ள குடியிருப்புகள் அனைத்திற்கும் அப்பெயர்கள் நீக்கப்பட்டு, புதிய பெயர்கள் சூட்டப்படும் என உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளதாக மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பெயர் மாற்ற முடிவினை, இதயப்பூர்வமாக வரவேற்றுப் பாராட்டி மகிழ்வதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments