மசாலா உலகின் மன்னர் எனக் குறிப்பிடப்படும் தரம்பால் குலாட்டி காலமானார்

0 2218
மசாலா உலகின் மன்னர் எனக் குறிப்பிடப்படும் தரம்பால் குலாட்டி காலமானார்

மசாலா உலகின் மன்னர் எனக் குறிப்பிடப்படும் தொழிலதிபரும், எம்டிஹெச் ஸ்பைசஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான தரம்பால் குலாட்டி, 97 வயதில் காலமானார்.

சிறிய அளவிலான மசாலா விற்பனையாளராக இருந்த எம்டிஹெச் நிறுவனத்தை, 15 தொழிற்சாலைகள், 62 வகையான மசாலா தயாரிப்புகளுடன் மசாலா உலகின் அசைக்க முடியாத நிறுவனமாக உயர்த்தியவர் தரம்பால் குலாட்டி.

பத்ம பூஷன் விருதுபெற்றுள்ள அவர், தொழில்முனைவோருக்கு ஆதர்சமாகவும் திகழ்ந்தவர். பள்ளிகள், மருத்துவமனைகள் கட்டி, கொடையாளராகவும் திகழ்ந்தார்.

பள்ளிப் படிப்பை பாதியிலேயே கைவிட்டவரான தரம்பால் குலாட்டி, 2017ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே அதிக சம்பளம் பெறும் சிஇஓ பட்டியலில் முதலிடத்தில் இருந்தார்.

உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக டெல்லியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தரம்பால் குலாட்டி இன்று காலமானார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments