பிரிட்டனுக்கு சென்று பைசரின் கொரோனா தடுப்பூசி போட பல இந்தியர்கள் ஆர்வம் காட்டுவதாக தகவல்

0 1537
பிரிட்டனுக்கு சென்று பைசரின் கொரோனா தடுப்பூசி போட பல இந்தியர்கள் ஆர்வம் காட்டுவதாக தகவல்

பிரிட்டனுக்கு சென்று பைசரின் கொரோனா தடுப்பூசி போடமுடியுமா என பல இந்தியர்கள் ஆர்வம் காட்டுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

பைசரின் தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு அனுமதி அளித்துள்ளதை அடுத்து அடுத்த வாரம் அது அங்குள்ள மக்களுக்கு போடப்பட உள்ளது.

இந்த நிலையில் அங்கு சென்றால் தங்களுக்கும் அதைப் போட வாய்ப்புள்ளதா என இந்தியர்கள் பலர் பயண ஏற்பாட்டாளர்களிடம் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.

ஆனால் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு தடுப்பூசி போட பிரிட்டனில் அனுமதி கிடைக்குமா என்பது தெரியாத நிலையில், அதை வைத்து சிறப்பு பயணத் திட்டங்களை சில பயண ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments