இந்தியாவில் நம்பர் 2 - சேலம் காவல் நிலையம் சாதனை !

0 1299
இந்தியாவில் நம்பர் 2 - சேலம் காவல் நிலையம் சாதனை !

இந்தியாவின் சிறந்த இரண்டாவது காவல் நிலையமாக சேலம் நகரில் உள்ள சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

இந்த ஆண்டுக்கான பட்டியலை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் முதலிடத்தை மணிப்பூரில் உள்ள காவல் நிலையம் பெற்றுள்ள நிலையில், சேலம் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையம் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது.

தெலங்கானா, கோவா மாநில காவல் நிலையங்களும் இந்த டாப் டென் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

சொத்து தொடர்பான குற்றங்கள், பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள்.

நலிவடைந்த பிரிவினருக்கு எதிரான குற்றங்கள், காணாமல் போனவர்கள், அடையாளம் தெரியாத உடல்களை கண்டறிதல் போன்றவற்றை கையாளுவதன் அடிப்படையில் சிறந்த காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்படுகின்றன

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments