சென்னையில் சிபிஐ அதிகாரிகள் போல நடித்து 10 கோடி சுருட்ட முயற்சித்த 5 பேர் கைது

சென்னையில் சிபிஐ அதிகாரிகள் போல நடித்து 10 கோடி சுருட்ட முயற்சித்த 5 பேர் கைது
சிபிஐ அதிகாரிகள் என கூறி தனியார் பல் மருத்துவ கல்லூரி தாளாளரிடம் 10 கோடி கேட்டு மிரட்டிய 5 பேர் போலீசாரிடம் சிக்கினர்.
சென்னை மதுரவாயல் கிருஷ்ணாநகரில் வசிக்கும் ராகேஷின் வீட்டில் நுழைந்த ஒரு கும்பல் அவர் மீது சிலை கடத்தல் தொடர்பாக FIR போடப்பட்டுள்ளதாகவும், அதிலிருந்து தப்பிக்க 10 கோடி கொடுக்குமாறும் மிரட்டினர். ராகேஷ் அளித்த தகவலின் பேரில் அங்கு விரைந்த ரோந்து போலீசார், குன்றத்தூரை சேர்ந்த நரேந்திரநாத்,யோவான், அனகாபுத்தூரை சேர்ந்த ஸ்டாலின் மதுரவாயலை சேர்ந்த ராமசுப்பிரமணி ஆவடியை சேர்ந்த சங்கர் ஆகிய 5 பேரை பிடித்தனர்.
அந்த கும்பலில் இருந்த 2 பேர் தப்பி ஓடி விட்டனர். கைதான ராமசுப்பிரமணி, ராகேஷின் நண்பர் என்பதால், பணம் இருப்பதை தெரிந்து கொண்டு இந்த மிரட்டல் வேலையில் இறங்கியிருக்ககூடும் என போலீசார் தெரிவித்தனர்.
Comments