இந்திய வரைபடம் தொடர்பான தவறான இணைப்பை நீக்குமாறு விக்கிபீடியா தளத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்

இந்திய வரைபடம் தொடர்பான தவறான இணைப்பை நீக்குமாறு விக்கிபீடியா தளத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்
ஜம்மு-காஷ்மீர் தொடர்பான தவறான வரைபடத்தை காட்டும் இணைப்பை உடனடியாக நீக்குமாறு, விக்கிபீடியா தளத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதில், தவறான இணைப்பை உடனடியாக நீக்காவிட்டல், விக்கிபீடியாவின் தளத்திற்கு முழுமையாக தடை விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்பு காஷ்மீர் போன்ற பகுதிகள் இந்தியாவிற்கு உட்பட்டதல்ல எனும் வகையில், விக்கிபீடியாவின் இணைப்பு காட்டுவதாக, ட்விட்டர் பயனாளர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Comments