பெண்ணிடம் சில்மிஷம் குடிகார போலீஸ்கார் தலையில் தட்டிய மக்கள்..!

0 6803

சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில், பாசி மணி ஊசி விற்ற பெண்ணிடம் குடிபோதையில் வம்பு செய்த போலீஸ்காரருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர். பாலியல் தொல்லை கொடுத்தவர் போலீஸ் என்பதால் தப்பவிடப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் பேருந்து நிலையத்தில் கையில் லத்தியுடன் தள்ளாடியபடி சாதாரண உடையில் இருந்த போலீஸ்காரர் ஒருவர் அங்கு பாசி மணி விற்றுக்கொண்டிருந்த பெண்ணிடம் அத்துமீறியதாகக் கூறப்படுகின்றது. இதனை தட்டிக்கேட்ட மாற்றுத் திறனாளியான வயோதிகரை விசாரிக்க வேண்டும் என்று கையைப் பிடித்து இழுத்து ரகளையில் ஈடுபட்டார். இதனை பார்த்த பயணிகள் சிலர் அவரை வீடியோ எடுத்தபடியே தட்டிக்கேட்டனர்.

ஒரு கட்டத்தில் அந்த போலீஸ்காரர் லத்தியை ஓங்கி அடித்ததால் ஆத்திரம் அடைந்த பயணிகள், அவரை சுற்றிவளைத்து பிடித்து முககவசத்தை கழற்றியதும் அவர் மிதமிஞ்சிய குடி போதையில் இருப்பதை கண்டறிந்தனர்.

பட்டப்பகலில் பெண்ணுக்குத் தொல்லை கொடுத்த புகாருக்குள்ளான குடிகார போலீஸ்காரரை புறங்கையை கட்டி தர்ம அடி கொடுத்த பயணிகள், அவர் மறைத்து வைத்திருந்த மது பாட்டிலைக் கைப்பற்றினர்.

அங்கிருந்த புறக்காவல் நிலையத்தில் அவரை ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் மணிமுத்தாறு ஆயுதப்படைக் காவலராக இருக்கும் சில்லிகுளம் கிராமத்தை ராமச்சந்திரன் என்பதும், பணி முடிந்து மது போதையில் வீட்டிற்கு புறப்பட்ட அவர், அங்கிருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து சிக்கிக் கொண்டது தெரியவந்தது.

போலீஸ்காரர் என்பதால் ராமச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்காமல் பேருந்தில் ஏற்றி புது மாப்பிள்ளை போல வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இதனைக் கண்ட அங்கிருந்த பெண்கள் தங்களது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். 

பாலியல் புகார்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே சமூகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியும். அதே நேரத்தில் போதையில் அத்துமீறிய காவலர் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments