"டிச.17க்குப் பிறகு மாடர்னா தடுப்பூசி பயன்பாட்டிற்கு அனுமதி கிடைக்கும்" - மாடர்னா சிஇஓ ஸ்டீபன் பான்செல் நம்பிக்கை

"டிச.17க்குப் பிறகு மாடர்னா தடுப்பூசி பயன்பாட்டிற்கு அனுமதி கிடைக்கும்" - மாடர்னா சிஇஓ ஸ்டீபன் பான்செல் நம்பிக்கை
மாடர்னா தடுப்பூசியின் பயன்பாட்டிற்கு டிசம்பர் 17ந் தேதிக்குப் பிறகு, அமெரிக்கா அனுமதி வழங்கும் என அந்நிறுவனத்தின் சிஇஓ ஸ்டீபன் பான்செல் தெரிவித்துள்ளார்.
அவசர கால பயன்பாட்டிற்கான அனுமதி கோரி, எப்டிஏ எனப்படும் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் மாடர்னா முறையிட்டுள்ளது. இந்நிலையில், டிசம்பர் 17ந் தேதி எப்டிஏவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
அக்கூட்டம் நிறைவடைந்த 72 மணி நேரத்திற்குள், மாடர்னா தடுப்பூசி பயன்பாட்டிற்கு அனுமதி கிடைக்கும் என, ஸ்டீபன் பான்செல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Comments