அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக 166 படகுகள் கரை திரும்பின - அமைச்சர் ஜெயகுமார்

தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக 166 ஆழ்கடல் மீன்பிடி படகுகள் பாதுகாப்பாக கரை திரும்பியதாக அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக 166 ஆழ்கடல் மீன்பிடி படகுகள் பாதுகாப்பாக கரை திரும்பியதாக அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில், புரெவி புயல் குறித்த தகவல் அனைத்து மீனவர்கள், மீனவர் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேவாலயங்களுக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு சென்றுள்ள படகுகளை, செயற்கைக்கோள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அருகிலுள்ள பாதுகாப்பான இடங்களுக்கு கரை திரும்ப நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
166 ஆழ்கடல் மீன்பிடி படகுகள் கரை திரும்பியதாகவும், ஆழ்கடல் மீன்பிடிப்பில் உள்ள 124 படகுகளை கடலோர பாதுகாப்பு படை, கடற்படை மூலம் கரை திரும்ப நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
Comments