கடந்த 24 மணி நேரத்தில் 30 மாவட்டங்களில் கொரோனாவுக்கு ஒரு உயிரிழப்பு கூட நிகழவில்லை - சுகாதாரத்துறை

0 4103
தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை வேகமாக குறைந்து, கடந்த 24 மணி நேரத்தில் 30 மாவட்டங்களில் ஒரு உயிரிழப்பு கூட நிகழவில்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை வேகமாக குறைந்து, கடந்த 24 மணி நேரத்தில் 30 மாவட்டங்களில் ஒரு உயிரிழப்பு கூட நிகழவில்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

புதிதாக ஆயிரத்து 428 பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பிலிருந்து, ஒரே நாளில் ஆயிரத்து, 398  பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு,11 பேர் உயிரிழந்தனர். சென்னையில் 397 பேருக்கு, புதிதாக, பெருந்தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. 9 மாவட்டங்களில், ஒருநாள் பாதிப்பு, ஒற்றை இலக்கத்தில், பதிவாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments