அலுவலக கட்டிடம் இடிக்கப்பட்டது தொடர்பான வழக்கில் எனது கருத்தை கேட்காமல் எந்த முடிவும் எடுக்கக் கூடாது: உச்சநீதிமன்றத்தில் கங்கனா ரணாவத் மனு தாக்கல்

அலுவலக கட்டிடம் இடிக்கப்பட்டது தொடர்பான வழக்கில் எனது கருத்தை கேட்காமல் எந்த முடிவும் எடுக்கக் கூடாது: உச்சநீதிமன்றத்தில் கங்கனா ரணாவத் மனு தாக்கல்
அலுவலக கட்டிடம் இடிப்பு வழக்கில் மாநகராட்சி வழக்கு தொடுக்கும் பட்சத்தில் தனது கருத்தை கேட்காமல் எந்த முடிவும் எடுக்கக் கூடாதென உச்சநீதிமன்றத்தில் கங்கனா ரணாவத் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த விவகாரத்தில் 2 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு கங்கனா தாக்கல் செய்த வழக்கில் கடந்த வாரம் மும்பை உயர்நீதிமன்றம், அவருக்கு மாநகராட்சியால் அனுப்பப்பட்ட நோட்டீசை ரத்து செய்து உத்தரவிட்டது. கங்கனாவுக்கு இழப்பீடு அளிக்கப்பட வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது.
இது கங்கனாவுக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படும் நிலையில், இதை எதிர்த்து மும்பை மாநகராட்சி மனு தாக்கல் செய்யலாம் என கங்கனா கருதுகிறார். இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் இன்று அவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
Comments