டெல்லியில் ஏழாம் நாளாக நீடிக்கும் விவசாயிகளின் போராட்டம்

0 1054
புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து ஏழாம் நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து ஏழாம் நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி டெல்லியை முற்றுகையிட வந்த பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேச மாநில விவசாயிகள் சோதனைச்சாவடிகள் முன் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சட்டத்தின் பாதகமான கூறுகள், செய்ய வேண்டிய திருத்தங்கள் பற்றி எழுத்து மூலம் கோரிக்கை விடுத்தால் அதுபற்றிப் பரிசீலிக்கப்படும் என அரசு நேற்று அறிவித்ததை விவசாயிகள் ஏற்கவில்லை. இதனால் போராட்டத்தில் பங்கேற்றுள்ள அனைவருக்கும் விவசாயிகளே உணவு சமைத்துப் பரிமாறி வருகின்றனர்.

இதனிடையே இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வீட்டில் அவரை, ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், வேளாண்துறை அமைச்சர் நரேந்திர தோமர் ஆகியோர் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments