உ.பி.,யில் நின்று கொண்டிருந்த கார் மீது மணல் லாரி சரிந்து விழுந்த விபத்தில் 8 பேர் உயிரிழப்பு..!

0 916
உத்தர பிரதேச மாநிலத்தில் நின்று கொண்டிருந்த கார் மீது மணல் லாரி சரிந்து விழுந்த விபத்தில் பெண்கள் உள்ளிட்ட 8 பேர் பலியாகினர்.

உத்தர பிரதேச மாநிலத்தில் நின்று கொண்டிருந்த கார் மீது மணல் லாரி சரிந்து விழுந்த விபத்தில் பெண்கள் உள்ளிட்ட 8 பேர் பலியாகினர்.

திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு 10 பேருடன் வந்த மஹிந்திரா ஸ்கார்பியோ கார், கவுசாம்பியில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் நின்று கொண்டிருந்தது.

அப்போது அவ்வழியே வந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாய்ந்து கார் மீது விழுந்தது. இதில் கார் ஓட்டுநர், காரிலிருந்த பெண்கள் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்தனர். விபத்துக்கு டயர் வெடித்து லாரி கட்டுப்பாட்டை இழந்து சாய்ந்ததே காரணமாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments