பேரயூரில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற இளைஞர் உயிரிழந்த விவகாரம் தொடர்பான விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்

0 713
மதுரை பேரையூரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இளைஞர் ரமேஷ் உயிரிழந்த விவகாரம் தொடர்பான விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை பேரையூரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இளைஞர் ரமேஷ் உயிரிழந்த விவகாரம் தொடர்பான விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

சகோதரரின் காதல் விவகாரத்தில் விசாரணைக்காக கடந்த செப்டம்பர் 16ல் ரமேஷை சாப்டூர் சார்பு ஆய்வாளர் ஜெயக்கண்ணன் மற்றும் காவலர் புதிய ராஜா ஆகியோர் அழைத்துச் சென்றனர். மறுநாள் அதிகாலை மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டது.

காவல்துறையினர் சட்டவிரோதமாக அழைத்துச் சென்று தாக்கியதன் காரணமாக ரமேஷ் உயிரிழந்ததாக புகார் எழுந்தது. ரமேஷ் உடல் மறு கூராய்வு செய்யப்பட்டு அந்த அறிக்கை சீலிடப்பட்ட உறையில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், ரமேஷ் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments