திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட வாயில் தரிசன டிக்கெட் வெளியீடு தற்காலிக நிறுத்தம்

0 833
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட வாயில் தரிசன டிக்கெட் வெளியீடு தற்காலிக நிறுத்தம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட வாயில் சிறப்பு தரிசனத்துக்கான 300 ரூபாய் ஆன் லைன் டிக்கெட் வெளியீடு, தொழில்நுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

வைகுண்ட ஏகாதசியையொட்டி , வைகுண்ட வாயில் வழியாக 2 நாட்கள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது வழக்கம். இந்தாண்டு பக்தர்கள் கோரிக்கையை ஏற்று முதல் முறையாக வருகிற 25 ம் தேதி முதல் ஜனவரி 3 ம் தேதி வரை 10 நாள்கள் பக்தர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர்.

இதற்குண்டான 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் நேற்று காலை 11 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தேவஸ்தான சர்வரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் டிக்கெட் வெளியிடப்படவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments