ஆன்லைன் விசாரணையின் போது சட்டையில்லாமல் தோன்றிய வழக்கறிஞர்- உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்டனம்

ஆன்லைன் விசாரணையின் போது சட்டையில்லாமல் தோன்றிய வழக்கறிஞர்- உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்டனம்
ஆன்லைன் விசாரணையின் போது சட்டையில்லாமல் தோன்றிய வழக்கறிஞருக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
குழந்தைகள் பாதுகாப்பு மையம் தொடர்பான வழக்கு நேற்று காணொலிக் காட்சி மூலம் நடந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் எல்.என்.ராவ், ஹேமந்த் குப்தா அடங்கிய அமர்வு விசாரித்துக் கொண்டிருந்தது.
கேரளா சார்பில் சிலர் ஆஜரானபோது, அதற்கான கேமராவை வழக்கறிஞர் ஒருவர் மேல் சட்டையின்றி சரி செய்து கொண்டிருந்தார். இதனைக் கண்ட நீதிபதிகள், வழக்கறிஞர்கள் பொறுப்பற்ற தன்மையில் நடந்து கொள்வதாகக் கூறி கண்டம் தெரிவித்தனர்.
முன்னதாக கடந்த அக்டோபர் மாதம் இதேபோன்ற நிகழ்வின் போது, வழக்கறிஞர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என நீதிபதி சந்திரசூட் கூறியது குறிப்பிடத்தக்கது.
Comments