எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான நிலுவை வழக்குகளை முன்னுரிமை கொடுத்து விசாரிக்கவேண்டும்- கீழமை நீதிமன்றங்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான நிலுவை வழக்குகளை முன்னுரிமை கொடுத்து விசாரிக்கவேண்டும்- கீழமை நீதிமன்றங்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுக்கவும், விசாரணையின் முன்னேற்றம் குறித்து அறிக்கை அளிக்கவும் கீழமை நீதிமன்றங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
எம்.பி. எம்.எல்.ஏக்களுக்கு எதிரான நிலுவை வழக்குகளை தாமாக முன்வந்து விசாரணை நடத்த தலைமை நீதிபதிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
56 அவதூறு வழக்குகளுக்கு முன்னுரிமை அளித்து, நாளொன்றுக்கு 10 வழக்குகள் வீதம் விசாரணைக்குப் பட்டியலிட்டு, அவற்றின் முன்னேற்றம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய நீதித்துறை பதிவாளருக்கு உத்தரவிட்டது.
Comments