சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 10 புதிய நீதிபதிகளை நியமிக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல்

0 1930
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 10 புதிய நீதிபதிகளை நியமிக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல்

சென்னை உயர்நீதிமன்றத்தில், 10 புதிய நீதிபதிகளை நியமிக்க, உச்சநீதிமன்ற கொலிஜியம் அளித்த பரிந்துரைக்கு, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

மாவட்ட நீதிபதிகள் அந்தஸ்தில் உள்ள, கண்ணம்மாள் சண்முகசுந்தரம், சத்திகுமார் , முரளி சங்கர் , மஞ்சுளா, தமிழ்ச்செல்வி, சந்திரசேகரன், நக்கீரன், சிவஞானம் வீராசாமி, இளங்கோவன் கணேசன், ஆனந்தி சுப்பிரமணியன் ஆகியோர், உயர்நீதிமன்ற புதிய நீதிபதிகளாகின்றனர்.

இதன்மூலம், உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 54லிருந்து, 64 ஆக உயரும். 10 புதிய நீதிபதிகளில், முரளிசங்கர்-தமிழ் செல்வி ஆகியோர், தம்பதியர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments