பாதுகாப்பாக கேட்சுகளும் பிடிப்பேன்.. அனுஷ்காவின் பாதுகாப்பிற்காக கால்களையும் பிடிப்பேன் - விராட் கோலியின் புகைப்படம்

0 3236
அனுஷ்காவின் காலை பிடித்து உதவி செய்யும் விராட் கோலி.
கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா ஷர்மா வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.
கிரிக்கெட் விளையாட்டில் பாய்ந்து கேட்சுகளை பிடிக்கும் விராட் கோலியின் பாது காப்பான கரங்கள், மனைவியின் கால்களை பிடித்து மனைவியின் பாதுகாப்பிற்கும் உறுதி அளிக்கின்றன.
 
பிரபல நடிகை அனுஷ்கா ஷர்மாவும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும் பல வருடங்களாக காதலித்து வந்தப் பின்பு 2017 ஆம் ஆண்டு பிரமாணட முறையில் திருமணம் செய்து கொண்டனர். தற்போது அனுஷ்கா ஷர்மா கர்ப்பமாக உள்ளார்.
 
அனுஷ்கா ஷ்ர்மா கர்ப்பமாக உள்ள நிலையில் பிரசவ காலத்தில் உடன் இருப்பதற்காக, ஆஸ்திரேலிய தொடரில் இருந்து விராட் கோலி பாதியில் வெளியேற உள்ளார். இந்த நிலையில் விராட் கோலியோடு இணைந்து அனுஷ்கா ஷர்மா வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று  வைரலாகி உள்ளது.
 
அனுஷ்கா ஷர்மா திரைப்படங்களிலும், விராட் கோலி கிரிக்கெட்டிலும்  மும்முரமாக இருந்தாலும் இருவரும் தங்களது அன்பை பரிமாறிக் கொள்வதில் எப்போதும் தவறியதில்லை. இதை எடுத்துக்காட்டும் விதமாக, யோகா செய்யும் போது தனது கால்களை பிடித்திருக்கும் விராட் கோலியின் புகைப்படத்தை அனுஷ்கா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
 
இந்த புகைப்படத்தில் அனுஷ்கா ஷர்மா யோகாசனம் செய்கிறார். அதுவும் மிகவும் கடினமான சிரசாசனம் செய்கிறார். தலைகீழாக நின்று காலை மேலே தூக்கி அனுஷ்கா ஷர்மா யோகாசனம் செய்யும் போது விராட் கோலி கால்களை பிடித்து உதவி செய்கிறார்.
 
மருத்துவரின் அறிவுரையின்படியே இந்த யோகாசனங்கள் செய்தேன். மேலும் இந்த யோகாசனங்கள் கற்றுத்தரும் யோகா ஆசிரியரும் என்னுடன் இருந்தார் என்று அனுஷ்கா குறிப்பிட்டுள்ளார்.
 
மனைவியின் கர்ப்பகாலத்தில், அவருக்கு பாதுகாப்பாக நின்று காலை பிடித்து உதவி செய்யும் அன்பு கணவராக தோன்றும் விராட் கோலியின் இந்த புகைப்படம் இணய தளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.
 
 
 
 
SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments