டெல்லியில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பேசியதற்கு சிவசேனா எதிர்ப்பு

0 2272

டெல்லியில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பேசியதற்கு சிவசேனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சீக்கிய குரு குருநானக்கின் 551வது ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி மூலம் பேசிய கனடா பிரதமர், டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்துவது குறித்து கவலை தெரிவித்தார்.

அமைதியான அவர்களது போராட்டத்திற்கு கனடா ஆதரவளிக்கும் என்று கூறினார். வெளிநாட்டு தலைவர் ஒருவர் இந்த விவகாரத்தில் முதன் முறையாக கருத்து தெரிவித்தது பற்றி டிவிட்டரில் பதிவிட்டுள்ள சிவசேனா துணை தலைவர் பிரியங்கா சதுர்வேதி, இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினை மற்றொரு நாட்டின் அரசியலுக்கு தீவனம் அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments