'திட்டமிட்டே தெரிவித்தேன்!' - மைதானத்தில் மலர்ந்த காதல் குறித்து மனம் திறந்த காதலன்

0 14780
திட்டமிட்டே காதலை அறிவித்தேன். ஆனால் அது காதலிக்குத் தெரியாது.

ஆஸ்திரேலியா - இந்தியா இடையேயான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது, திட்டமிட்டே தனது ஆஸ்திரேலியா தோழியிடம் காதலை வெளிப்படுத்தியதாக இந்திய ரசிகர் தெரிவித்துள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டம் கடந்த 29-ம் தேதி சிட்னியில் நடைபெற்றது. மைதானத்தில் கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில், ஆஸ்திரேலிய இளம்பெண் ஒருவருக்கு, இந்திய ரசிகர் முழங்காலிட்டு, மோதிரம் அணிவித்து காதலை வெளிப்படுத்திய நிகழ்வு சமூகவலைதளங்களில் வைரலானது.

போட்டியின் போது இந்திய இளைஞர் காதலை வெளிப்படுத்தியதையும், அதை ஆஸ்திரேலிய இளம்பெண் மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டதையும் திடீர் நிகழ்வு என்றும், போட்டியில் தோற்றாலும் காதலை வென்றோம் என்றும் சமூகவலைதளங்களில் இந்திய ரசிகர்கள் கொண்டாடினர். இந்த நிகழ்வினால், இந்த காதல் ஜோடி மிகவும் பிரபலமாகி விட்டார்கள்.

இதனிடையே, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த காதலர், மைதானத்தில் நிகழ்ந்த சம்பவம் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்று என்று விளக்கமளித்துள்ளதுள்ளார். இந்திய இளைஞர் முன்கூட்டியே திட்டமிட்டு காதலை வெளிப்படுத்தியதாகவும், ஆனால் தாம் அதுகுறித்து எதுவும் அறிந்திருக்கவில்லை என்றும் ஆஸ்திரேலிய இளம்பெண் ரோஸ் கூறி உள்ளார்.

காதலை வெளிப்படுத்திய தருணம் மகிழ்வானது என்று தெரிவித்துள்ள இந்திய இளைஞர், அச்சம்பவத்தை தொலைக்காட்சிகளில் பார்த்தப் பின், பலரும் செல்போனில் தங்களைத் தொடர்பு கொண்டு வாழ்த்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments