சென்னை உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை யுடியூபில் சேனலில் நேரலையில் ஒளிபரப்பானதால் பெரும் சர்ச்சை

0 2762
சென்னை உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை யுடியூபில் சேனலில் நேரலையில் ஒளிபரப்பானதால் பெரும் சர்ச்சை

சென்னை உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை யூடியூப் சேனலில் நேரலையில் ஒளிபரப்பானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

கல்லூரி மாணவர்களின் அரியர் தேர்வை தமிழ்நாடு அரசு ரத்து செய்ததை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் ஆன்லைன் மூலம் வழக்கு நடக்கிறது.   

கடந்தமுறை நடந்த விசாரணையில், நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஆன்லைனில் விசாரணையை கண்டதால், தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

விசாரணையில் இடையூறும் ஏற்பட்டது. இதனால் எரிச்சலடைந்த நீதிபதிகள் வழக்கை விசாரிக்க மறுத்து விட்டனர். இந்த நிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அதை சிலர்,  யூடியூப் சேனலில் இணைப்பை ஏற்படுத்தி, ஒளிபரப்பு செய்துள்ளனர். வழக்குக்கு தொடர்பில்லாதவர்களை உள்ளே அனுமதிக்காத நிலையில், அது யூடியூபில் ஒளிப்பரப்பாகியுள்ளது. 

இது நீதிபதிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments